மீனவ தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் சுவரொட்டிகள்

ஜனநாயக வாய்ப்பிற்குள் மீனவ உரிமைகளை வென்று சமாதானம் மற்றும் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவோம் எனும் தொணிப் பொருளில் மட்டக்களப்பில் சுவரொட்டிகள்.

 

23 ஆவது உலக மீனவ தினத்தை முன்னிட்டு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் குறித்த சுவரொட்டிகள் இன்று மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் ஒட்டப்பட்டுள்ளது.

 

மீனவர்களின் உரிமைகளுக்கு போரடிக் கொண்டு இருக்கும் மீனவ இயக்கமானது 23ஆவது மீனவ தினத்தை முன்னிட்டு இலங்கையில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களையும் ஒன்றிணைத்து மாபெரும் கூட்டம் ஒன்று எதிர்வரும் 9 ஆம் திகதி தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.