பண்டாரியாவெளியில் பிறக்கும் சிசுவின் வாழ்வை உயர்த்துவோம் செயற் திட்டம் 

0
515

பண்டாரியாவெளி கிராம அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க,  அறிவாலயம் அறக்கட்டளை நம்பிக்கை நிதியத்தின் புதிய திட்டமான பிறக்கும் சிசுவின் வாழ்வை உயர்த்துவோம் செயற் திட்டம்  பண்டாரியாவெளி கிராமத்தில் “பிறக்கின்ற ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் செலான் வங்கியில் 5000/- வைப்புச் செய்து புத்தகம் வழங்கும் நிகழ்வு”  நேற்று   RDS கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு செலான் வங்கி முகாமையாளர் எம்.பிறேமினி அலையப்போடி தியாகராசா , அற்புதமணி   , தேவநாயகம் நவநாயகம் (கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், ம.தெ.மே பட்டிப்பளை)
சபாபதி சிவானந்தம் (அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர், ம.தெ.மே பட்டிப்பளை)
இரத்தினசிங்கம் பிரதீஸ்குமார் (கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்)
நல்லதம்பி ஜெயரஞ்சன் (கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர்)
சுப்பிரமணியம் பிரணவராஜ் (கிராம அபிவிருத்திச் சங்க பொருளாளர்)
அறிவாலய அறக்கட்டளை நிதியத்தின் செயலாளர் அதன் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கிராம மக்கள்  ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.