சித்தாண்டி மக்களை சந்தித்த பிரதமர்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சித்தாண்டி பிரதேசத்திற்கு இன்று திங்கட்கிழமை மாலை விஜயம் மேற்கொண்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பார் பொன்.ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர் ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சித்தாண்டி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொதுமக்கள் சந்திப்பினை மேற்கொண்டதுடன், பொதுமக்கள் முன்பாக உரையாற்றாமல் மக்களை ஏமாற்றி விட்டு சென்றுவிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுவார் என்ற எண்ணத்துடன் வருகை தந்த பொதுமக்கள் பெரிதும் ஏமாற்றத்துடன் சென்றதை காணக் கூடியதாக இருந்தது