இன்று முதல் இரட்டை கப் வாகனங்களுக்கான சொகுசு வரி நீக்கம்

இரட்டை கப் வாகனம் அல்லது டபிள் கப் வாகனத்திற்காக அறவிடப்பட்ட சொகுசு வரி இன்று முதல் நீக்கப்படுகின்றது.

இன்று முதல் சம்பந்தப்பட்ட வரி சொகுசு மோட்டார் வாகனம் மற்றும் ஜீப் வாகனங்களுக்கு மாத்திரமே அறவிடப்படும். சொகுசு வரி கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த தினத்திற்கு பின்னர் Letter of credit கடன் சான்று ஆவணம் மேற்கொள்ளப்பட்டு இறக்குமதி செய்யப்படும் அனைத்து சொகுசு வாகனங்களுக்கும் புதிய வரிமுறை ஏற்புடையதாகும்.

புதிய சட்ட விதிகளுக்கு அமைவாக 35 இலட்சத்திற்கு மேற்பட்ட பெறுமதியைக் கொண்ட டீசல் மற்றும் பெற்றோல் கார்கள் மற்றும் ஜீப் வண்டிகளை இறக்குமதி செய்யும் பொழுது சொகுசு வரி அறவிடப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.