முகத்துவாரத்தினை வெட்டுமாறு முறையிடும் விவசாயிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற கடும்மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக விவசாய நிலங்கள் வெள்ளத்தினால் முழ்கி காணப்படுவதால் அழிவடையும் அபாயத்தினால் இருப்பதால் முகத்துவாரத்தினை வெட்டி கடலுக்குள் வெள்ள நீரினை ஓடவிடும்படி விவசாயிகள் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர் இதனைத்தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவசர கூட்டத்திற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து கலந்துறையாடல் இன்று மாலை 4.30 மணிக்கு இடம் பெற்றது.
இக்கலந்துறையாடலுக்கு நீர்பாசன திணைக்களம் ,வீதி அபிவிருத்தி அதிகாரசபை ,கடலோர பாதுகாப்பு சபை ,காலநிலை அவதான நிலையம் ,பிரதேச செயலாளர்கள் ,விவசாய திணைக்களம்,கமநல சேவைகள் திணைக்களம் ,மீன்பிடித்திணைக்களம் ,மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரிகள் ,அனர்த்த முகாமைநிலையம் ,விவசாய காப்புறுதி சபை நிலையம் ஆகிய திணைக்கங்கள் இணைந்து நடத்தப்பட்ட கலந்துறையாடலில் எருமைத்தீவு படையான்வெளி ,பெரியகளம் ,சத்துருக்கொண்டான் ,கரடியனாறு, பண்டாரியாவெளி ,சேத்துக்குடா ஆகிய பிரதேசங்களில் மொத்தம் 1890 ஏக்கர் விவசாய வயல் நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைவான மழைவிழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது.ஆண்டுக்கு 1650 மில்லிமிற்றர் கிடைக்கப்படவேண்டும் ஆனால் தற்போது 1124.3 மில்லிமிற்றர் மழைவிழ்ச்சி தான் கிடைத்திருப்பதனாலும் தற்போது மக்களுக்கான போக்குவரத்துக்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மற்றும் சுகாதார பிரச்சனைகளுக்கு ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளது. அதனை தொடர்பு விவசாயிகள் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பணிகளுக்கு இடையுறுகள் ஏற்படா வண்ணம் விரைவில் சுமுகமான தீர்வு நாளை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபரின் அறிவுரைக்கமைய அனைத்து திணைக்கள அதிகாரிகளும் ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.