ம ழை நீரினை உடனடியாக கடலுக்குள் அனுப்புகின்ற போது நிலத்தடி நீர் குறைவடைந்து செல்லும்

ம ழை நீரினை உடனடியாக கடலுக்குள் அனுப்புகின்ற போது நிலத்தடி நீர் குறைவடைந்து செல்கின்றது என மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷணகௌரி தினேஷ் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று(28) நடைபெற்ற விழிப்புணர்வு ஒன்றுகூடலிலையே இதனைக்குறிப்பிட்டார்

குறித்த ஒன்றுகூடலில் பாடசாலை அதிபர்கள், கமரெக்கும பாதுகாப்பு குழு தலைவர்கள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஒன்றுகூடலில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்களும் பங்குபற்றினர்.

இதன் போது, தற்போது பெய்து வரும் மழை காரணமாக உப்பு வெள்ளம் ஆற்றுக்கு அருகில் உள்ள வயல் நிலங்களுக்குள் புகுந்துள்ளதாகவும் இதைக் கருத்தில் கொண்டு முகத்துவாரத்தை வெட்டி நீ ரை கடலுக்குள் அனுப்பி உப்பு வெள்ளத்தை இல்லாமல் செய்யுமாறும்  அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த பிரதேச செயலாளர்,

தற்போதுதான் மழை பெய்வதற்கு ஆரம்பித்துள்ளது. பெய்கின்ற மழை நீர் தேங்கி நின்று நிலத்தடியில் சேகரிக்கப்பட வேண்டும், குளங்களிலும் நீர் நிரம்ப வேண்டும், நிலத்தடி நீரும், குளத்துக்கு தேவையான நீரும் சேகரிக்கப்பட்ட பின்பே கடலுக்குள் அனுப்ப வேண்டும். நீர் தேங்கி நிற்கின்றது என்பதற்காக உடனே அவற்றை அகற்றிவிட்டால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் இவ்விடயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.