தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு நிபந்தனைகளுக்கும்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இணங்காது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு நிபந்தனைகளுக்கும்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
இணங்காது என,  எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,  “கூட்டமைப்பினால் இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் நிபந்தனைகள் அடங்கிய ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. எனினும், எனது கைகளுக்கு அது இன்னும் கிடைக்கவில்லை.

அவ்வாறு கிடைத்தால் அதற்கு இணங்க முடியாது. கூட்டமைப்பு முன்வைக்கும் எந்தவொரு நிபந்தனைகளுக்கும் நாங்க்ள அடிபணிய போவதில்லை. நாடு எமக்கு முக்கியம். நாட்டை பிரிப்பதற்கு இடமளிக்க முடியாது” என்றார்.