கல்முனையில் சுகாதாரநிருவாகம் தடுமாறுகிறதா?

கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட டாக்டர் சுகுணன் அரசகட்டளைப்படி நேற்றுமுன்தினம் மட்டு மாவட்ட சுகாதாரவேவைப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டு  கடந்த 16ம் திகதி கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.அவருக்கு (17) வியாழக்கிழமை மீண்டும் கல்முனைக்கு செல்லுமாறு சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகத்தின்உத்தரவு கிடைத்தமையினால் அவர்வெள்ளிக்கிழமைகல்முனைக்கு வந்தார்.
ஆனால் அச்சமயம் மாகாணசுகாதாரசேவைப்பணிப்பாளராகச்சென்ற டாக்டர் எ.அலாவுதீன் கல்முனை அலுவலகத்தில் பணிப்பாளர் அறையில் இருந்துள்ளார். அதனால் பணிப்பாளர் சுகுணனுக்கு எங்கிருப்பது எனத்தெரியாமல் வேறொரு அறையிலிருந்ததாகக்கூறப்படுகிறது.
மாகணப் பணிப்பாளர் அலாவுதீன் தான் கல்முனையை பதில் கடமைபார்க்கவிருப்பதாக கூறியதாகக்கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அரசமருத்துவசேவைகள் சங்க கிழக்கு மாகாணபிரதிநிதி டம் கேட்டபோது இது தேர்தல்காலம் எந்தவித இடமாற்றமோ நியமனமோ யாரும் செய்யமுடியாது.
மாகாணப்பணிப்பாளர் அலாவுதீன் கல்முனையில் பதில்கடமையாற்றமுடியாது. அவருக்கு யாரும் இவ்வுத்தரவை பிறப்பித்திருக்கமுடியாது. அவர்கூட தன்னிச்சையாக இத்தேர்தல் காலத்தில் அங்க பதில் கடமைக்கு ஒருவர் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டிருக்கும்போது பதில்கடமையாற்றமுடியாது.

பொதுச்சேவை ஆணைக்குழுவின் நியமனம் பெற்றவர் டாக்டர் சுகுணன். எனவே அவரே கல்முனை பணிப்பாளராக கடமையாற்றக்கூடியவர் என்றார்.

கல்முனையில் இத்தகைய தில்லுமுல்லுகளுக்கு திரைமறைவில்இரு அரசியல்வாதிகள்பின்புலத்திலிருப்பதாகக்கூறப்படுகிறது.

இதேவேளை மாகாணபணிப்பாளராக டாக்டர் அலாவுதீன் நியமிக்கப்பட்டதும் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டபிற்பாடே. எனவே அதுவும் ரத்துச்செய்யப்படலாமென சுகாதாரசேவை வட்டாரங்கள் தெரிவித்தன.