மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச முதியோர் தின விழா

“முதியோர்களான உங்களுக்கு சிறந்த இடத்தினை வழங்கும் நாளைய தினத்தினை நோக்கி” எனும் தொனிப்பொருளில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை (18) சர்வதேச முதியோர் தின விழா நடைபெற்றது.
முதியோரை கௌரவிக்கும் நோக்கில் நடாத்திய இந் நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது ஆலோசனைக்கு அமைவாக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.விவேகானந்தராஜா லோகினி தலைமையில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன் சிரேஸ்ட பிரஜைகளை அதிதிகள் கௌரவிக்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.