தமிழ் மொழி நூல்களை சிங்கள மொழியிலும் சிங்கள மொழி நூல்களை தமிழிலும் மொழிபெயர்க்க புதிய வேலைத்திட்டம்

0
227

சிங்கள மொழி எழுத்தாளர்களின் இலக்கிய நூல்களை தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பதற்கும், தமிழ் மொழி நூல்களை சிங்கள மொழியில் மொழிபெயர்ப்பதற்கும் நூல் நிலையங்கள் மற்றும் சுவடிகள் சபைகள் மூலம் வெளியிவதற்கான புதிய வேலைத்திட்டம் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் கந்தையா பத்மநாதனினால் எழுதப்பட்ட 10 நூல்கள் வெளியிடும் நிகழ்வு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் கடந்த 13 ஆம் திகதி நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் உறையாற்றுகையில் நாட்டிலுள்ள தமிழ் மக்கள் பெருமளவில் வாசிப்பது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் ஆகும் என்றும் அமைச்சர் கூறினார்.

இலங்கை தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதன் மூலம் நாட்டின் கலாச்சாரம் தொடர்பிலான இலக்கிய நூல்களை வாசிப்பதற்கு தமிழ் மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைப்பதாகவும் அமைச்சர் கூறினார். தமிழ் மக்களுக்கு தமது மொழியில் நூல்களை எழுதுவதற்கும், வெளியிடுவதிலும் உள்ள குறைபாடுகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேசிய நூல்நிலையம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட பிரிவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். தமிழ் மற்றும் சிங்கள நூல்களை மொழிபெயர்க்கும் வேலைத்திட்டத்தின் மூலம் இந்த மொழிகளை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பு கிட்டுவதுடன் ஒருவர் இன்னொருவரை புரிந்து கொள்ளுவதற்கும் சந்தர்ப்பம் கிட்டும் என்றும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்.