ஆரையம்பதி தவிசாளர் ஐ.தே.கவில் இணைவு

ஆரையம்பதி பிரதேச சபைத் தவிசாளர் சோமசுந்தரம் மகேந்திரலிங்கம், புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று (16) இணைந்துகொண்டார்.

கடந்தஉள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஆரையம்பதி பிரதேச சபைத் தேர்தலில் சுயேற்சையாகப் போட்டியிட்டு தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்ட இவர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆதரவாகச் செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.