திருமலையில் போதை பொருட்களுடன் மூவர் கைது

திருகோணமலை நகர் மற்றும் அலஸ்தோட்டம் பகுதியில் போதை பொருட்களுடன் இன்று மூவரை கைதுசெய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

 

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசமான நீதிமன்ற சந்தியில் வைத்து மூதூர்-4,பெரிய பாலத்தைச் சேர்ந்த 44 வயது ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்த போது அவரிடமிருந்து 62 மில்லிகிரேம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையின் அடிப்படையில் நீதிமன்ற வீதியில் 63 வயது நபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 63 மில்லிகிரேம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அலஸ்தோட்டம் பகுதியில் முல்லேரியா, கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட 42 வயதுடைய நபர் கைதுசெய்ப்பட்டதாகவும் கைதுசெய்யப்பட்ட நபர் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுபவர் எனவும் அவரிடமிருந்து ஜஸ் போதைப்பொருள் 85 மில்லிகிரேமும் 5 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நீதிமன்ற வீதியில் கைதுசெய்ப்பட் இரண்டு நபர்களையும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதுபொருட்களையும் துறைமுகப்பொலிஸார் வசம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அலஸ்தோட்டத்தில் கைதுசெய்யப்பட்ட நபரையும் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களையும் தலைமையகப் பொலிஸார் வசம் ஒப்படைத்ததாகவும் திருகோணமலை மாவட்ட மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்