சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கல்வி பயிலும் அனைத்து துறை மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள், நாளை மறுதினம் (16) மீள ஆரம்பிக்கப்படுமென, பல்கலைக்கழ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனிடையே, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் நாளை (15) மாலை 06 மணிக்கு முன்பதாக சமூகமளிக்குமாறு, பிரதிப் பதிவாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.