முருகு.தயாநிதியின் இரு நூல்கள் வெளியீடு

தேசிய கல்வி நிறுவகத்தின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி முருகு தயாநிதி எழுதிய இயல்பு மீறிய குழந்தைகள் நூல் வெளியீடும் கண்டிராசன் ஒப்பாரி நூல் அறிமுகமும் இன்று(13) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு இந்து கல்லூரியில் மண்டபத்தில் இடம்பெற்றது.

ஓய்வு நிலை அதிபர் ஏ.எஸ்.யோகராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கல்வியாளர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நூலாசிரியர் அறிமுகஉரையை பி.பேரின்பராசாவும், நூலுக்கான நயவுரையை உதவிக்கல்விப் பணிப்பாளர் ரி.பார்த்தீபன் நிகழ்த்தினார். மேலும், கண்டிராசன் ஒப்பாரி நூல் அறிமுகவுரையை பேராசிரியர் எஸ்.யோகராசா நிகழ்த்தியிருந்தார்.