தேர்தல் குறித்து திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த கூட்டமைப்பு தயார் – சிறிநேசன்

0
267

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராகவுள்ளதாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாமாங்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “தேசிய இனப்பிரச்சினை, காணாமலாக்கப்பட்டோர் விடயம், கைதிகளாக்கப்பட்டவர்கள், வடக்கு கிழக்கு அபிவிருத்தி, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.

தேசிய இனப்பிரச்சினை மிக முக்கியமானதாக இருக்கின்றது. இந்த விடயங்கள் பற்றி இரண்டு, மூன்று வேட்பாளர்களுடன் கலந்துரையாடவேண்டியுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவும் ஒரு முற்போக்கான சிந்தனையுடன் போட்டியிடுகின்றார்.

இவ்வாறான நிலைமையில் மூவரோடும் பேச்சுவார்த்தை நடத்துகின்றபோது அவர்களிடம் இருக்கின்ற உளத்தூய்மையாக தேசிய இனப்பிரச்சினை குறித்து அவர்கள் என்ன நினைக்கின்றனர், வடக்கு கிழக்கு அபிவிருத்தி, காணாமலாக்கப்பட்டோர், அரசியல் கைதிகள் விடுதலை போன்ற விடயங்களை நாங்கள் நன்றாக அலசி ஆராய்ந்த பின்னர்தான் முடிவுகளை எடுப்போம்” என மேலும் தெரிவித்தார்.