உதைபந்தாட்ட பெரும் சமரை வெற்றி கொண்டது பன்சேனை பாரி

பெண்களுக்கான உதைபந்தாட்ட பெரும்சமரை பன்சேனை பாரி வித்தியாலய அணியினர் வெற்றி கொண்டனர்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பன்சேனை பாரி வித்தியாலய அணியினருக்கும் அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய அணியினருக்கும் இடையிலான, பெண்கள் காற்பந்தாட்ட பெரும் சமர் இன்று(10) வியாழக்கிழமை பன்சேனை பாரிவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய அணியினருக்கு எதிராக பன்சேனை பாரி வித்தியாலய அணியினர் ஒருகோள்களினை உட்புகுத்தி 1ற்கு 0பூச்சியம் என்ற வகையில் வெற்றி வாகை சூடினர்.

மாகாணமட்டத்தில் கடந்த காலங்களில் முதலிரு இடங்களையும் பெற்றுக்கொண்ட இவ்விரு அணிகளும் தேசிய போட்டிகளிலும் பங்கெடுத்து மாவட்டத்திற்கும் பெருமைச் சேர்த்து வரும் இவ்விரு அணிகளுக்கும் இடையில் கடந்த மூன்று வருடங்களாக காற்பந்தாட்ட பெரும்சமர் போட்டி நடாத்தப்பட்டு வருகின்றது.

கடந்த வருடம் அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இப்போட்டியிலும் பன்சேனை பாரி வித்தியாலய அணியினர் வெற்றி வாகை சூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பன்சேனை வித்தியாலய அதிபர் ஜமுனாகரன் தலைமையில் நடைபெற்றகாற்பந்தாட்ட பெரும்சமர் போட்டி நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன், உதவிப்பிரதேச செயலாளர், வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் போன்ற பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
போட்டியில் பங்கெடுத்திருந்த அனைவருக்கும் பதங்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமையுடன், வெற்றிக்கிணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.