ஆசிரியர்களுக்கான வாழ்வியல், விழுமிய பயிலரங்கு

0
260

வாழ்வியல் விழுமியங்கள் தொடர்பான விளக்கமளிக்கு பயிலரங்கு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கன்னன்குடா மகா வித்தியாலய மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் கடமைபுரியும் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்காக இப்பயிலரங்கு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும், மனிதமேம்பாட்டு பயிற்றுவிப்பளாருமான ஈரோடு கதிர் என அழைக்கப்படும் ப.கதிர்வேல் வளவாளராக கலந்துகொண்டு வாழ்வியல் விழுமியங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.

மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இப்பயிலரங்கின், இறுதியில் குறித்த வளவாளருக்கு நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.