சீ.மு.இராசமாணிக்கத்தின் 45வது நினைவு தினம்!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பட்டிருப்புத் தொகுதியின் முன்னாள் தலைவருமான சீ.மு.இராசமாணிக்கத்தின் 45வது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் இரா.சாணக்கியன் தலைமையில் களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நேற்று(திங்கட்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள சீ.மு.இராசமாணிக்கத்தின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், நிகழ்வுகள் ஆரம்பமாகி மண்டபத்தில் அன்னாரின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், இலங்கைத் தமிழரசுக் கடசியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.