தேர்தல் விதிமுறைகள் மீறல் – 28 முறைப்பாடுகள்

தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பாக இது வரையில் 28 முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் வன்முறை செயற்பாடுகளை கண்காணிக்கும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மத்திய நிலையத்தின் இணைப்பாளர் மஞ்சுள கயநாயக்க இது தொடர்பாக தெரிவிக்கையில் சர்வதேச தினத்தை பயன்படுத்தி அரசியல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டமை, அரச நிறுவனங்களில் நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டமை மற்றும் இலஞ்சம் வழங்கியமை தொடர்பிலேயே இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் காண்காணிப்பு பணிகளில் சுமார் 1,200 பேரை ஈடுபடுத்துவதற்கு தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கணக்கீடு செய்வதற்காக விசேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் மஞ்சுள கயநாயக்க தெரிவித்துள்ளார்.