மயானத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலஸ்தோட்டம் பிரதேச மாயானத்தின் உள்ளே ஆயதங்கள் கைப்பற்றப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

 

மாயானத்தில் இறந்தவர் ஒருவரின் நல்லடக்கத்திற்காக குழி வெட்டும்போது பிளாஸ்டிக் பெரல் ஒன்று தட்டுப்பட்டதாகவும் அதனை திறந்து பார்க்கும்போது ஆயுதங்கள் கானப்பட்ட நிலையில் குழி அகல்பவர்களினால் உப்புவெளி பொலிஸாருக்கு தெரிவிக்கப்ட்ட நிலையில் தாம் ஆயதங்களை கைப்பற்றியதாக அவர்கள் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் ஆ-17 யுடி-2 வர்க்க டி-56 5துப்பாக்கிகளும் (தயாரிப்பு யுகஸ்லாவியா )இ.எஸ்.எம்.ஜி-1இடி-56 துப்பாக்கி மகஸீன் -5 இ.எஸ்.எம்.ஜி- மகஸீன் -3 இடி-56 துப்பாக்கி சன்னங்கள் 1700 இ.9எம் எம் துப்பாக்கி சன்னங்கள் 32. என்பன தம்மால் கைப்பற்றப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர் .

 

குறிப்பிட்ட பிரதேசத்தில் இந்திய இராணுவ காலத்தில் டெலோவின் பயிற்சி முகாம் இயங்கியது குறிப்பிடத்தக்கது.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் யாவும் சுத்தப்படுத்தி பாவிக்கும் நிலையில் காணப்படுவதாக உப்புவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.