மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் செயற் திட்டத்திற்கு அமைவாக வலயமட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி செவ்வாய்கிழமை மகிழடித்தீவு மைதானத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிவஶ்ரீ மு.க. சச்சிதானந்தக் குருக்கள்இ கல்வி கலை பண்பாடு மற்றும் சமூக பொருளாதார அபிவிர்த்தி ஒன்றியத்தின் தலைவர் சி. தேவசிங்கம் இ கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் தி. பார்த்தீபன் போன்றோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

மண்முனை மேற்குஇ ஏறாவூர் பற்றுஇ மண்முனை தென்மேற்கு ஆகிய கோட்டங்களிலிருந்து தரம் 5க்கு உட்பட்ட மாணவர்கள் இப் போட்டியில் கலந்துகொண்டனர்.

இவ் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் தேசிய கீதம்இ வலய கீதம் இசைக்கப்பட்டதையடுத்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டுஇ உடற்பயிற்சிஇ அணிவகுப்புஇ நடனம் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது.

நடைபெற்ற போட்டிகளில் தரம் 3இல் இருட்டுச்சோலைமடு விஸ்னு வித்தியாலயம்இ அம்பிளாந்துறை கனிஷ்ட வித்தியாலயம்இ மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயம் முறையே 1ம்இ2ம்இ3ம் இடங்களை பெற்றது.

தரம் 4இல்இ இருட்டுச்சோலைமடு விஸ்னி வித்தியாலயம்இ கொத்தியாபுலைகலை வாணி வித்தியாலயம்இ நாவற்காடு கனீஷ்ட வித்தியாலயம் முறையே 1ம்இ 2ம்இ 3ம் இடங்களைப் பெற்றுக்கொண்டது.

தரம் 5இல்இ கரடியனாறு இந்து வித்தியாலயம்இ மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயம்இ ஈச்சந்தீவு வித்தியாலயம் முறையே 1ம்இ 2ம்இ 3ம் இடங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

[contact-form-7 404 "Not Found"]