ஆடல்புரிந்து சிறுவர்களையும் மகிழவைத்த முதியோர்கள்.

மண்முனை தென்மேற்கு பிரதேச சிறுவர் தின, முதியோர் வார நிகழ்வு மகிழடித்தீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் இன்று(01) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இதன்போது முதியோர்களினால் பல்வேறு நிகழ்ச்சிகள் ஆற்றுகை செய்யப்பட்டன. இதனைப்பார்த்திருந்த சிறுவர்களும், அதிதிகளும் தம்மை மறந்து உச்ச கரகோசத்தினை வழங்கினர்.

சிறுவர்களையும், முதியோரையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், விளையாட்டுக்களும் நடைபெற்றன.

பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது, விளையாட்டுப்போட்டிகளில், கலைநிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருந்த சிறுவர்கள், முதியோர்கள் அனைவருக்கும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக மகிழடித்தீவு கிராம மக்களுடன் இணைந்து நடாத்திய இந்நிகழ்வில், அதிகளவான சிறுவர்கள், முதியோர்கள் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.