வலையிறவுப் பாலத்துக்கு ‘மின் விளக்குகளை பொருத்தவும்’

மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குட்பட்ட வலையிறவுப் பாலத்துக்கு, மின் விளக்குகள் பொருத்துமாறு, உரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள்  கோரிக்கை முன்வைக்கின்றனர்.

குறித்த பாலம், எழுவான் கரையிலிருந்து படுவான் கரைப் பிரதேசத்துக்குச் செல்வதற்கான பிரதான பாதையாகும். இரவு வேளைகளில் அதிகளவான பிரயாணிகள் அசௌகரியங்களுக்கு மத்தியில் பிரயாணம் செய்வதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

மழை காலங்களில் போது, இப்பாலத்தினூடாக மட்டக்களப்பு நகருக்குச் செல்வது சிரமமாகவுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பிரயாணிகளின் நலன் கருதி, மிக விரைவாக குறித்த பாலத்துக்கு மின் விளக்குகள் பொருத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது மக்களின் கோரிக்கையாகும்.