தொழில் பிரவேசத்திற்கான அடிப்படை பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

தொழில் பிரவேசத்திற்கான அடிப்படை பயிற்சியினை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(29) நடைபெற்றது.
மனிதவள பயிற்சி நிலையம், ரி.ஆர் அறக்கட்டளை இணைந்து இளைஞர் யுவதிகளுக்காக நடாத்திய தொழில் பிரவேசத்திற்கான அடிப்படை பயிற்சியினை நிறைவு செய்த மாணவர்களுக்கே இச்சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மனிதவள பயிற்சி நிலையத்தின் தொழில் ஆலோசகரும், வளவாளருமான அ.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.