ஜனாதிபதி தேர்தல் – தபால் மூலம் வாக்களிப்பதற்கான திகதி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிக்கும் தினம் அறிவிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைவாக ஒக்டோபர் மாதம் 30ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கு திகதி குறிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். போலிஸ் திணைக்களம் மற்றும் தேர்தல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்காக நவம்பர் மாதம் 1 ஆம் திகதி தேர்தல் வாக்களிப்பதற்காக நாள் குறிப்பிடப்பட்டுள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்பதற்கான பணி தற்பொழுது நடைபெற்று வருகின்றது.  இந்த பணிகள் இம்மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.