கல்முனை மாநகரில் முடங்கிய வைத்தியசாலைகள் : நோயாளிகள் அவதி

.

நூருல் ஹுதா உமர்

நாடுமுழுவதும் வைத்தியர்கள் ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதை போன்று அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்திய வைத்தியசாலை வைத்தியர்களும்  ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை, அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை,என அனைத்து வைத்தியசாலையின் வைத்தியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சிகிச்சைக்காக சென்ற பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் காணப்பட்டதுடன் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் பல்வேறு தொற்றுநோய்கள் சம்பந்தமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் கிளினிக் சிகிச்சைகளும் இடம்பெறவில்லை.