கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய திருவேட்டை நிகழ்வு

0
425

கல் நந்தி புல் உண்டு வெள்ளையரை துரத்தியடித்த  அற்புதம் நிகழ்ந்த கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய  திருவேட்டை நிகழ்வு இன்று(15) இரவு முனைக்காடு வீரபத்திரர் ஆலய முன்றலில் நடைபெற்றது.

தேரோட்ட பெருவிழா இன்று மாலை இடம்பெற்றதை தொடர்ந்து கொக்கட்டிச்சோலை  ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இருந்து, குதிரை வாகனத்தில்   திருவேட்டையாடுவதற்காக தான்தோன்றீஸ்வரர்  எழுந்தருளி   முனைக்காடு வீரபத்திரர் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு பூசை நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன்பின்னர் திருவேட்டை நிகழ்வு நடைபெற்றது.