கொக்கட்டிச் சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இருந்து நேரடியாக…

2000 ஆண்டிற்கு மேற்பட்ட பழமையானதும் வரலாற்று சிறப்பு மிக்கதும், உற்சவத்தினை தேரோட்டம் என கூறப்படுவதுமான கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்ட நிகழ்வு இன்று(15) நான்கு மணிக்கு நடைபெற உள்ள நிலையில், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

அதேவேளை தேருக்கு வடம் பூட்டுவதற்கான கயிறுகளும் தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ளன.

இன்னும் சிறிது நேரத்தில் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெற்று இவ்வருட தேரோட்ட நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.