மட்டக்களப்பில் பிள்ளையானையும் மக்களையும் சந்தித்தார் டக்ளஸ் தேவானந்தா.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா இன்று சிறையிலிருக்கும்  கிழக்கின் முதல் முதல்வரான சந்திரகாந்தனை சந்தித்துள்ளார்.

அதன் பின்பு மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறிப்பிட்ட  சந்திப்புக்பளில்  ஜனாதிபதி தேர்தல் மற்றும்  கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழரின் வாக்குப்பலத்தை சிதறடிக்கா வண்ணம் ஓரணியில் அனைத்து கட்சிகளும் திரளுவதன் அவசியம் குறித்து அலசப்பட்டதாக அறிய முடிகின்றது.