கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இரு தேர்களுக்கு கால் நாட்டி வைப்பு

(படுவான் பாலகன்)  நீண்டகாலம்ப வரலாற்று சிறப்பு மிக்கதுமான கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்களுக்கான கால்கள் நாட்டும் நிகழ்வு இன்று(12) மாலை நடைபெற்றது.

ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

எதிர்வரும் பதினைந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு தேரோட்ட நிகழ்வு நடைபெற உள்ளது.

இத்தேர்களை அலங்கரிக்கும் பொருட்டு பிள்ளையார், சித்திரத்தேர் போன்றவற்றிற்கான கால்கள் இன்று நடப்பட்டன.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.கு. சச்சிதானந்த குருக்கள் தலைமையில் பூஜை ஆராதனைகள் இடம்பெற்றமையை தொடர்ந்து ஆச்சாரியாரினால் கால்கள் நடப்பட்டன.