பன்சேனை பாரி வித்தியாலயத்தில் அதிபர் விடுதி திறப்பு

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பன்சேனை பாரி வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட அதிபர் விடுதியை இன்று(10) செவ்வாய்க்கிழமை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர் சோ.கணேசமூர்த்தி திறந்து வைத்தார்.

கல்வி அமைச்சின் பண்பு, அறிவு மற்றும் வலுமிக்க மனிதநேய மாணவச் சந்ததியினரை உருவாக்கும் நோக்கில், அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அதிபர் விடுதியே  திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் யமுனாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதேச இணைத்தலைவர் சோ.கணேசமூர்த்தி, வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன்,  ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.