15 வயது சிறுமி துஷ்பிரயோகம் – 20 வயது இளைஞர் கைது

0
262

திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இச்சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-

15 வயது சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக கூறி  ரொட்டவெவ மற்றும் நொச்சிகுளம் போன்ற இடங்களில்  வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 20 வயதுடைய இளைஞரை கைது செய்துள்ளதாகவும்,

சிறுமியை சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்  மொரவெவ பொலிசார் தெரிவித்தனர்.