காட்டுயானைகளின் தாக்கத்தினால் சிரமம் மக்கள் தெரிவிப்பு!

முல்லைத்தீவு, தேராவில் பகுதியில் காட்டுயானைகளின் தாக்கத்தினால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள தேராவில் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்களுக்குள் தினமும் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனால் தாங்கள் அன்றாடம் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதாவது, தினமும்மாலை மற்றும் இரவு வேளைகளில் மக்கள் குடியிருப்புக்களுக்குள் புகும் காட்டு யானைகள் பயன்தரு மரங்களையும் வாழ்வாதார பயிர் செய்கைகளையும் அழித்து வருகின்றன எனத்தெரிவித்துள்ள பிரதேச மக்கள் அண்மையில் இந்தப் பிரதேசத்தில் யானையினால் வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.