மக்களின் உணர்iவுகளைத் தட்டுவது இலகு; சிக்கலிலிருந்து அவர்களை மீட்பது கடினம்!

மக்களை உணர்ச்சிவசப்படுத்துவது என்பது இலகுவான காரியம், அந்த மக்கள் பிரச்சினைகளில் சிக்கும்போது அவர்களை மீட்பது கஸ்டமான காரியம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பிரதான தபால் திணைக்களத்தின் தேவை கருதி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனால் ஒரு தொகுதி கணிணிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் இரண்டு இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில், இந்த கணிணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட தபால் மா அதிபர் சி.அருட்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் து.மதன் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.