பயங்கரவாதியின் உடல் பாகங்களை தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

மட்டக்களப்பு, கள்ளியங்காடு பகுதியில் உள்ள இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட பயங்கரவாதியின் உடல் பாகங்களை தோண்டியெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில்  குறித்த தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியின் உடல் பாகங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு, கள்ளியங்காடு பகுதியில் உள்ள இந்து மயானத்தில் புதைக்கப்பட்டன.

 

குறித்த செயலுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து தொடர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வந்த நிலையில், குறித்த பயங்கரவாதியின் உடற்பாகங்களை அங்கிருந்து மீண்டும் தோண்டி எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.