தற்கொலைதாரியின் உடல் மீளவும் தோண்டும் வரையில் போராட்டங்கள் ஓயாது என்கிறார் வியாழேந்திரன்

0
572

தமிழ் சமூகம் அனாதையாக உள்ளதன் காரணத்தினாலேயே ஒரு முஸ்லீம் தீவிரவாதியின் உடற்பாகங்களை தமிழ் மக்களின் பாரிய எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

இதேவேளை, மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட தற்கொலைதாரியின் உடல் எச்சங்கள் மீளவும் தோண்டப்படும் வரையில் போராட்டங்கள் ஓயாது என வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்

மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் தற்கொலை குண்டுதாரியின் உடல் எச்சங்கள் புதைக்கப்பட்டமை தொடர்பில் தமிழ் அரசியல் வாதிகள் பலர் எதிர்ப்பு வெளியிடாமை குறித்தும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஏவ்வாறாயினும், மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் ஏப்ரல் தற்கொலை தாரியின் சடலம் புதைக்கப்பட்டமை தொடர்பில் மக்களை ஆர்ப்பாட்டத்திற்கு தூண்டியமைக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளீர் அணித் தலைவி செல்வி உள்ளிட்ட ஐவருக்கு எதிராக நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.