கொக்கட்டிச்சோலை தான்தோன்றீ அப்பனுக்கு 1ல் கொடியேற்றம்

கிழக்கிலங்கையில் சிறப்புற்று விளங்குவதும், தானாகா தோன்றியதுமான கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய 2019ம் ஆண்டிற்கான மகோற்சவம் எதிர்வரும் 01ம் திகதி(01.09.2019) அதிகாலை 4.30மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 15.09.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டமும், அன்றிரவு முனைக்காடு வீரபத்திரர் ஆலயத்தில் திருவேட்டையும் அடுத்த நாள் காலை(16.09.2019) தீர்த்தோற்சவமும் நடைபெற்று ஆலய உற்சவம் நிறைவுபெறவிருக்கின்றது.

சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தலைமையில் பூசை ஆராதனைகள் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.