எனக்கு தெரியாமலேயே புதைத்தார்கள் : மாநகர முதல்வர்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் மனிதவெடி குண்டுதாக்குதல் நடத்திய காத்தான்குடியை சேர்ந்த முகமது நாசர் முகமதுஆசாத் என்பவரின் தலை உள்ளிட்ட உடல்பாகங்கள் புதைக்கப்பட்டமை தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகரசபை முதல்வர்,
 தம்மிடம் புதைப்பதற்கான அனுமதியை கோரியபோதிலும்,  நீதிமன்ற உத்தரவு இணைக்கப்படாததால் அந்தகோரிக்கையை  நிராகரித்ததாக தெரிவித்தார்
எனினும்தமதுசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் மனித எச்சம்  புதைக்கப்பட்டதைதான் இன்று தான் அறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடிய பின்னரே  அடுத்தகட்டத்தை தீர்மானிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.