சஹிறான் தலையால் மட்டக்களப்பில் சீறியெழுந்த மக்கள்.

(எருவில் துசி)

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்டவரின் உடற்பாகங்கள் மட்டக்களப்பு இந்துமயானத்தில் புதைக்கப்பட்டதை கண்டித்து மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்  செய்ததுடன் புதைத்த உடற்பாககங்களை உடனே அகற்று என கோஷமிட்டு இந்தப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக அரசாங்க அதிபர் மற்றும் மாநகர ஆணையாளரை மக்கள் சாடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. சற்று முன் மாநகர ஆணையாளர் தமது அனுமதி இன்றி புதைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.