வருடத்திற்கு 1,000 இற்கும் மேற்பட்டோர் பக்கவாத நோயினால் பாதிப்பு

மூளையில் இரத்த நாளத்தின் செயற்பாடு தடைப்படுதல் அல்லது வெடிப்பதினால் ஏற்படும் பக்க வாதம் தற்பொழுது உலக நாடுகளில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

இது தொற்றா நோயாகும். வருடத்தில் 1,000 நோயாளருக்கும் மேற்பட்டோர் இலங்கையில் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். வைத்தியசாலைகளில் இறக்கும் நோயாளர் எண்ணிக்கையில் இந்த பக்க வாத நோயினால் இறப்போர் 4 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

ஓவ்வெரு 2 நிமிடத்துக்கு ஒருமுறை இலங்கையில் எத்தகைய நபரும் பக்கவாத்திற்கு உள்ளாக கூடும். இதே போன்று ஒவ்வொரு ஆறு நிமிடத்துக்கு ஒருமுறை எத்தகைய நபரும் பக்க வாதத்தினால் இறக்க கூடும் நாட்டின் மக்கள் தொகையில் ஆறு பேரில் ஒருவர் இந்த நோயினால் பாதிக்கப்பட இடமுண்டு. 60 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் இறப்பதற்கு இரண்டாவது காரணமாக இந்த நோய் இடம்பெற்றுள்ளது. உயிரிழக்காமல் நீண்டகாலத்திற்கு அல்லது குறுகிய காலத்திற்கு என்ற ரீதியில் ஊனமுற்ற நிலையில் வாழவேண்டி ஏற்படும்.

இதனால் குடும்ப கட்டமைப்பில் இடம்பெறும் அழுத்தம் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய விடயங்களில் சிறுநீரக நோய், இரத்த அழுத்தம், இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்தல், இருதய பாதிப்பு, இருதய நோய் நரம்பு போன்ற தொற்றா நோய்கள் மற்றும் புகைத்தல், மதுபானம் பயன்படுத்துதல் போன்ற சுகாதார பாதிப்புக்கள் இதற்கு முக்கியமான காரணங்களாக அமையும்.

பக்கவாத நோயை தவிர்க்கவேண்டுமாயின் நபரின் உயரத்திற்கு ஏற்ற எடை மற்றும் உடல் எடையை சீரான வகையில் முன்னெடுப்பது முக்கியமானததாகும். நடத்தல், நீந்துதல், ஓடுதல் போன்ற உடல் பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் இந்த நோயை தவிர்க்க முடியும்.