மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச சபை எல்லைக்குள் எமது சபை ஊடாக செய்யவேண்டிய திட்டங்கள் பல இருந்தும் அதற்கான நிதி உதவிகளோ வளங்களோ இல்லாத நிலையில் நாம் இருக்கின்றோம் எனவும் தான் தவிசாளராக பதவியேற்று ஒன்றரை வருடம் கடந்தும் இற்றவரை உள்ளூராட்சி அமைச்சினால் எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லை எனவும் மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சண்முகராஜா தெரிவித்தார்.
வியாழக்கிழமை 22ம் திகதி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவி்யைில்,
இப் பிரதேசத்தில் கம்பெரலிய திட்டத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்கள் நியாயமான வேலைகளைச் செய்துள்ளார். அவர்களுக்கு நன்றியை தெரிவிக்கின்றேன்.
எதிர்வரும் காலத்தில் இந்த கம்பெரலிய திட்டங்கள் எமது பிரதேச சபைக்கு ஊடாக செயற்படுத்தப் படுமானால் எமது சபைக்கும் ஓரளவு வருமானம் கிடைக்கும் இதற்கு அமைச்சர்கள் உதவிபுரிய வேண்டும்.
மற்றும் நாம் தற்போதைய வறட்சியால் பாதிக்ப்பட்ட மக்களுக்கு தினமும் 12 கிராம சேவகர் பிரிவுகளுக்கு பவுசர்கள் மூலமாக குடிநீர் வழங்கி வருகின்றோம்.
எமது சபைக்குட்பட்ட எல்லைப் பிரதேசத்திற்கு பல தேவைப்பாடுகள் உள்ளது ஆனால் எமக்கு நிதியோ, வளங்களோ இல்லாத நிலையில் உள்ளோம். இந்த விடயத்தை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கின்றேன். என தெரிவித்தார்.