சோதனைநடவடிக்கைகள் ,கைதுகள் தொடரும்.

(எருவில் துசி)

அவசரகால சட்டம் நீக்கப்பட்டதால், தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சோதனை, கைது, தடுத்து வைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படையினருக்கு அதி விசேட வாத்தமானி அறிவிப்பின் மூலம் கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 24 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பொது மக்களின் அமைதியை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.