இரண்டு வீதிகளின் வேலைகளை எருவில் கிராமத்தில் ஆரம்பித்தார் அரச அதிபர்.

(எருவில் துசி)

எருவில் அங்கத்தவர் வீதி மற்றும் ஐயனார் ஆலய வீதி என்பவற்றினை அரசாங்க அதிபர் திரு மா.உதயகுமார் அவர்கள் இன்று(24) ஆரம்பித்து வைத்தார்.

மன்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் வழிநடத்தலில் எருவில் தெற்கு கிராம அபிவிருத்தி சங்கம் மேற்படி வீதிகளுக்கான அங்குராட்பண பணிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு சுதாகரன் அவர்களும் மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருவாளர் நவநீதன் அவர்களும் மற்றும் கிராம சேவையாளர் ஆலயங்களின் தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலர் இணைந்து நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.