அநாதரவானசிறுவர்களின் நலன்கருதி  ஒருலட்சம் ரூபா வீதம் வங்கிநிதி

குண்டு வெடிப்பில்   அநாதரவானசிறுவர்களின் நலன்கருதி  ஒருலட்சம் ரூபா வீதம் வங்கிநிதி பத்திரங்களை  மாகாண ஆளுநர் ஷாம் விஜலால் சில்வா  மட்டக்களப்புநகரில்   வழங்கிவைத்தார்.

மட்டக்களப்புநகர ஏப்ரல் 2 1  குண்டு வெடிப்பில் அநாதரவான சிறுவர்களின் எதிர்கால நலன்கருதி சுமார் இருபதுலட்சம் ரூபாவை  அன்பளிப்பு செய்ய கிழக்கு மாகாணசபையின் பதவிநிலை உத்தியோகத்தர்களின் நலன்புரிச்சங்கம்முன்வந்துள்ளது.

இதற்கமைய குறித்த குண்டு வெடிப்பில் தாய் தகப்பனை இழந்து  அநாதரவான 23 சிறுவர்களின்எதிர்காலகல்விமற்றும் இயல்புவாழ்க்கை  செயல்பாடுகளின்நலன்கருதி தலா ஒருலட்சம் ரூபா வீதம் வங்கிக்கணக்குளில் வைப்பு செய்த வங்கிபத்திரங்களை கிழக்கு மாகாண ஆளுநர் ஷாம் விஜலால் டீ சில்வா  இன்று 20மட்டக்களப்புநகரில்  நடைபெற்ற விசேட வைபவத்தில் வழங்கிவைத்தார்.

 கிழக்கு மாகாணசபையின் பதவிநிலை உத்தியோகத்தர்களின் நலன்புரிச்சங்கதலைவி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாநில ஆயர் கலாநிதி பொன்னையா யோசப் ,  கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் வை.எம்.அபயகோன்.முதலமைச்சின் செயலாளர் எம்.ஏ..அஸீஸ், உட்பட மதகுருமார்கள்,மாகாண அமைச்சின் செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள்,பொதுமக்களென பலரும் பிரசன்னமாகியிருந்தனர் .

 மாகாண ஆளுநர் ஷாம் விஜலால் டீ சில்வாஇங்கு கருத்து வெளியிடுகையில் ஆங்கிலேயரின் ஆட்சியின் பின்னர் இந்நாட்டின் முஸ்லீம் தமிழ் சிங்கள மக்களின் தலைவர்களே ஒற்றுமையுடன் நாட்டை வழி நடாத்திச்சென்றனர்.இந்த ஒற்றுமை எதிர்காலத்திலும் திகழ்வதன்மூலமே எமது நாடு வளர்ச்சிகாணும் .

இன்றுஉயிர்ப்பு ஞாயிறுதின குண்டு வெடிப்பில்பெற்றோரை இழந்து அநாதரவான பிள்ளைகளின்எதிர்கால  நலனில்அக்கறையுடன்உதவ முன்வந்த இந்த புண்ணிய கருமத்துக்கு நன்றி பாராட்டுகின்றேன்.எனக்குறிப்பிடடார்.