சஹ்ரான்களை உருவாக்கும் ஹிஸ்புல்லாவின் பல்லைக்கழகத்தை மூடு கிரானில் ஆர்ப்பாட்டம்.

சஹ்ரான்களை உருவாக்கும் ஹிஸ்புல்லாவின் பல்லைக்கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருமாறு கோரி ஆர்பாட்டம் திங்கட்கிழமை மட்டக்களப்பு கிரானில் நடைபெற்றது

கிரான் – புலிபாந்தகல் சுற்றுவட்டத்தில் ஒன்றுகூயடி சிங்கள தமிழ் மதகுருமார் மற்றும் பொதுமக்கள் தமது கோரிக்கைகளை முனைவைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்படனர்.

மட்டக்களப்பு புணாணைப் பகுதியில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் நிருமானிக்கப்படும் பல்லைக் கழகமானது இஸ்லாமிய தீவிரவாத தற்கொலைதாரிகளை உருவாக்குவதற்கு மதவாத உரமூட்டும், மூளைச்சலவை செய்யும் கோட்பாடு சார்ந்த இடமாகும்.

தொழிற்பயிற்சி நிலையமொன்றினை ஆரம்பிப்பதாக கூறி தான் தலைவராக நிருவகிக்கும் ஹிரா நிறுவனத்தினூடாக வெற்றிகலோ கம்பஸ் என்ற பெயரில் ஷரியா பல்கலைக் கழகமொன்றை ஆரம்பித்துள்ளார். இந்த பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய கோட்பாடு ஷரியாசட்டம் அரபிய மொழி, கலாசாரம் ஆகியவற்றை கற்பிப்பதன் மூலம் இலங்கையை யுத்த பூமியாக மாற்றும் மூளைச்சலவை செய்யும் தொழிற்சாலையாக இதனை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார் இதனை உடனடியாக தடை செய்யுமாறு கோரி இந்த ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஹிஸ்புல்லாவின் பல்லைக் கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவோம், கிழக்கு மாகாணத்தின் மக்களை முஸ்லீம் தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாப்போம், போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாதைகளை ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்