பிள்ளையானின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பில் பேரணி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் விடுதலையை வலியுறுத்தியும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் மட்டக்களப்பில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

 

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சந்திரகாந்தனின் (பிள்ளையான்) 44ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டே இந்த பேரணி நடைபெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தனின் தலைமையில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமாகிய இந்த பேரணியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

‘கிழக்கின் அடிமை விலங்கினை உடைக்க சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கு’ எனும் தலைப்பில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.