வாகன விபத்தில் வீதியில் நின்ற ஒரு மாடு பலி

மட்டக்களப்பு மாவட்டம் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் ​இடம்பெற்ற வாகன விபத்தில் வீதியில் நின்ற ஒரு மாடு இறந்துள்ளதுடன் இரண்டு மாடுகள் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் ஆயித்தியமலை – வாய்காலடிச்சேனை பிரதான வீதியில் வியாழக்கிழமை15ம் திகதி  இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவ் வீதியால் சென்ற கெப் ரக வாகனம் வீதியில் நின்ற 03 எருமை மாடுகளுடன் மோதியதில் வாகனம் பலத்த சேதங்களுக்குள்ளாகியதுடன் ஒரு மாடு இறந்துள்ளதுடன் ஏனைய இரு மாடுகள் பலத்த காயங்களுக்குள்ளாகி இறக்கும் நிலையில் உள்ளதாகவும் தெரியவருகின்றது.

இவ் விபத்து தொடர்பில் ஆயித்தியமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.