ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸாவை நிறுத்த கோரி மட்டக்களப்பில் பொது மக்கள் எழுச்சி பேரணி.

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸாவை நிறுத்த கோரி மட்டக்களப்பில் பொது மக்கள் எழுச்சி பேரணி.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸாவை நிறுத்த கோரி சனிக்கிழமை(17) மட்டக்களப்பில் சஜித் பிரேம தாஸவின் எஸ்.பி.ஜி. 2020      இன் மாவட்ட இணைப்பாளர் ம.ஜெகவண்ணண் தலைமையில் பொது மக்கள் எழுச்சி பேரணி ஒன்று இடம்பெற்றது.

கல்லடி மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து ஆரம்பமான இப்பேரணி கல்லடி பாலத்தினூடாக சென்று  மட்டக்களப்பு கிழக்கு பல்கலைகழக மருத்துவ பீடத்திற்கு முன்னால் உள்ள சுற்றுவட்டம் வரை சென்று மீண்டும் ஆரம்பித்த இடத்தை வந்தடைந்தது.
இப் பேரணியில் கலந்துகொண்ட பொதுமக்கள், சமுக சேவையாளர், செயல் வீரன், எமது தலைவர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க கோரியும், எமக்கு அவர் 5 ஆயிரதிற்கு மேற்பட்ட வீட்டுதிட்டங்களை பெற்று தந்தவர், என்றும் மக்கள் விரும்பும் வேட்பாளரையே கட்சி தலைமை நியமிக்க வேண்டுமென்றும், சஜித் பிரேமராஸவின்  படத்தை  தாங்கிய வண்ணம் 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் இளைஞர் அணி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இப்பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.