மட்டு பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்கக் கோரி ரதன தேரர் தலைமையில் மக்கள் பேரணி

0
238

மட்டக்களப்பு தனியார் பல்கக்லைகழகத்தை அரசுடமையாகக் கோரியும், வட கிழக்கில் இடம்பெறும் காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தலைமையில் நாளை மறுதினம் திங்கட்கிழமை மட்டக்களப்பில் பாரிய மக்கள் பேரணியொன்று இடம்பெறவுள்ளது.

 

மட்டக்களப்பு – கிரான் சந்தியில் இந்த பேரணி இடம்பெறவுள்ளது.

இது குறித்து அத்துரலியே ரதன தேரரிடம் வினவிய போது ,

இந்த பல்கலைகழகம் சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளது என்பதற்கு தகுந்த ஆதரங்கள் கிடைத்துள்ளன. எனினும் அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுத்தாகத் தெரியவில்லை. எவ்வாறிருப்பினும் இந்த பல்கலைகழகத்தை உடனடியாக அரசுடமையாக்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தியே நாளை மறுதினம் மக்கள் பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த பேரணியின் போது ‘ நாட்டை பாதுகாக்கும் அமைப்பு ‘ என்ற அமைப்பையும் மக்களுக்கு அறிவிக்கவுள்ளோம். இதற்கு ஆதரவளிக்கும் முகமாக சகல தமிழ் , சிங்கள மக்களையும் கிரான் சந்தியில் அணிதிரளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அத்தோடு, வடக்கு கிழக்கில் இடம்பெறும் காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்வரும் 19 ஆம் திகதி  மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் மக்கள் இந்த பேரணியை நடத்த தீர்மானித்துள்ளோம் என்றார்.