ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேசமகா சபைக்கூட்டம்

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய உற்சவ காலத்திற்கான தேசமகாசபைக் பொதுக்கூட்டம் எதிர்வரும் 18.08.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய சிவமுன்றலில் முற்பகல் 10மணிக்கு வண்ணக்கர் தலைவர் பூ.சுரேந்திரராஜா தலைமையில் நடைபெறவுள்ளதாக வண்ணக்கர் செயலாளர் இ.சாந்தலிங்கம் குறிப்பிட்டார்.

இதன்போது, கணக்கறிக்கை சமர்ப்பித்தல், தேரோட்ட மகோற்சவம் பற்றி ஆராய்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்து ஆலோசிக்கப்படவுள்ளமையினால், அனைத்து சைவ அடியார்களுக்கு இக்கூட்டத்திற்கு சமுகமளித்து தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.